தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4 ஆம் தேதி இன்று தொடங்குகிறது. இந்த கத்திரி வெயில் மே மாதம் 28 வரை நீடிக்கும். கத்திரி வெயிலின் முன்னோட்டமாக 14 நகரங்களில் நேற்று வெயில் சதமடித்தது.
வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போது சூரியனின் வீரியம் அதிகரிக்கும். பூமி உஷணத்தைக் கிளப்பும் வேகமும் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, கத்திரி வெயில் காலத்தில்தான் கோடைக் காலத்தில் மிக அதிக வெப்பம் உணரப்படுவது வழக்கம்.
தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம்தொடங்குவதற்கு முன்பே ஒருசில நகரங்களில் வெயிலின் அளவு உச்சத்தைத் தொட்டு வருகிறது.