தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி 25ம் தேதி தொடக்கம் - ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:-

தூத்துக்குடி மாவட்டத் தில் வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணியான ஜமாபந்தி, வருகிற 25ம் தேதி முதல் தாலுகா அலுவலகங்களில் காலை 10 மணிக்கு நடக்கிறது. மே 25 முதல் ஜூன் 1ம் தேதி வரை தூத்துக்குடி தாலுகாவில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலும், திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை யிலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் தூத்துக்குடி சப்-கலெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலும், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் நடக்கிறது.

மே 25 முதல் ஜூன் 7ம் தேதி வரை எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தார், விளாத்திகுளம் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடக்கிறது. சாத்தான் குளம் தாலுகாவில் மே 25 முதல் 31 வரையும், ஏரலில் 25 முதல் ஜூன் 3 வரையும் திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக மற்ற நாட்களில் ஜமாபந்தி நடைபெறும். எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்களை அந்தந்த கிராமங்களுக்கு உரிய வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில், கொரோனா தடுப்பு வழிமுறையை பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடித்து வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post