கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மிஸ்ட்ரல் ஹேக்பெஸ்ட் 2022


கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் பெங்களுர், மிஸ்ட்ரல் சொல்யூஷன்ஸ் ஆகியவை இணைந்து நடத்தும் மிஸ்ட்ரல் ஹேக்பெஸ்ட் 2022 நிகழ்வின் துவக்கவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு தொழில்நுட்பத்துறை மற்றும் சமுதாயம் எதிர்கொள்கின்ற சவாலான நிஜ உலக பிரச்சனைகளை மின்னனு, மென்பொருள் மற்றும் இயந்திர பொறியியல்  துறைகளின் எதிர்கால தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எவ்வாறு தீர்வு காண்பது என்பதனை நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலகளிருந்து சுமார் 75 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குனர் முனைவர் எஸ்.சண்முகவேல், முதல்வர் முனைவர் கே.காளிதாசமுருகவேல் மற்றும் துறைத்தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர் எ.மேகசுந்தர் வரவேற்றார். 

இரண்டாம் ஆண்டு மாணவர் எம்.குருபிரசாத் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ) முன்னாள் தலைவர் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. மின்னியல் துறைப் பேராசிரியருமான  பத்மபூஷன் முனைவர்.

எஸ்.கிறிஸ்டோபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார். அவர் ஆராய்ச்சிகளில் உள்ள சிக்கல்களை எவ்வாறு  ஆய்வு செய்வது என்பது குறித்தும், பேராசிரியர்களை ஆராய்ச்சி சம்மந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

பெங்களுர், மிஸ்ட்ரல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராஜீவ் ராமசந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் இந்நிகழ்ச்சியானது மாணவர்கள் தங்கள் தொழில்நுட்பத்துறை சார்ந்த தேவைகளை தெரிந்து கொள்ளவும் மேலும் அவர்கள் குழுவாக ஒன்றிணைந்து செயல்படவும் மிகவும் உறுதுணையாக இருக்கும் எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் நிறைவு விழா  கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கே.ஜெ.பிரசன்ன வெங்கடேசன் வரவேற்றார். 

கல்லூரி இயக்குனர் முனைவர் எஸ்.சண்முகவேல் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் பத்மபூஷன் முனைவர் எஸ்.கிறிஸ்டோபர், ஹேக்பெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகளை வழங்கி மாணவர்களிடம் உரையாற்றினார்.

முதல் பரிசு ரூபாய் மூன்று லட்சத்தை ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியை சேர்ந்த  அஸ்வந்த், அத்வின் மற்றும்  கோகுல் ராசன்  மாணவர்கள் பெற்றனர். இரண்டாவது பரிசு ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்தை பெங்களுர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியை சேர்ந்த கிரண், நவீன் நடராஜ் மற்றும் மொகமத் ரெயான் கான் மாணவர்கள் பெற்றனர். 

மூன்றாவது பரிசு ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை சென்னை கே.சி.ஜி காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியை சேர்ந்த  ஸ்ரீநபிஸா, ஷைக்அல்பாத் மற்றும் ஸ்ரீராம் மாணவர்கள் பெற்றனர். மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி எ.சுபிட்ஷா நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  கல்லூரி இயக்குனர், முதல்வர், மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறைத் தலைவர் முனைவர் ஏ.செண்பகவல்லி மற்றும் மிஸ்ட்ரல் நிர்வாகிகளின் வழிகாட்டுதலின்படி  துறைப்பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Previous Post Next Post