"வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.20 இலட்சம் வரவு, செலவு செய்தால் பான், ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்" - நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு..!

வங்கிக் கணக்கில் ஓராண்டில் 20 இலட்ச ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தினாலோ, பணம் எடுத்தாலோ அவர்கள் ரொக்க நடவடிக்கைக்குப் பான் எண், ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

வங்கி மட்டுமல்லாமல், கூட்டுறவு வங்கி, அஞ்சலகங்களில் உள்ள கணக்குகளில் ரொக்க நடவடிக்கைக்கும் இது பொருந்தும் என்றும், இந்தப் புதிய விதி மே 26 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post