இப்போட்டியானது, மே 17 முதல் 28 தேதி வரை நடக்க உள்ளது. மொத்தம் 30 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். 540 வீரர்கள் பங்குபெற்று 50 போட்டிகள் நடக்க உள்ளன.
இப்போட்டியில் இருந்து இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு செய்ய்யப்படவுள்ளனர். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
கடந்த ஆண்டு 11வது தேசிய ஜூனியர் ஆண்கள் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்ற காரணத்தினாலேயே, இந்த ஆண்டும்,தூத்துக்குடியில் நடத்த அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் தமிழக அணியிலிருந்து 5 வீரர்கள் ஜூனியர் பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இந்த ஐந்து வீரர்களும் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் 12வது ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிக்குழு சேர்மனாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்.பி துணை சேர்மனாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் போட்டிகளின்
அமைப்புச் செயலாளராக ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாட்டின் தலைவர் சேகர் மனோகரன் ஆகியோர் இணைந்து" இப்போட்டியை சிறப்பாக நடத்தவுள்ளனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாட்டின் பொதுச் செயலாளர் (பொறுப்பு) செந்தில் ராஜ்குமார், பொருளாளர் ராஜராஜன், இணைச்செயலாளர் ஓலிம்பியன் திருமாவளவன், துணைத் தலைவர் சங்கிலிகாளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.