வாலிபால் பெடரேஷன் ஆப் இண்டியா (VFI) சார்பில் 21 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளும் அகில இந்திய கைப்பந்து போட்டிக்கு பல்லடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அணிக்கான தேர்வு போட்டியில் 12 மாணவர்கள், 12 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்
வாலிபால் பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் மாகாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூரில் 21 வயதிற்குட்பட்ட ஆண்கள் & பெண்கள் கலந்து கொள்ளும் அகில இந்திய கைப்பந்து போட்டி வருகிற 10.5.22 முதல் 15.5.22 வரை நடைபெற உள்ளது.
இதற்காக தமிழ்நாடு அணிக்கு 21 வயதிற்குட்பட்ட ஆண்கள் & பெண்கள் கலந்து கொள்ளும் தேர்வு போட்டி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த குங்குமபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி (WHITE CLOUDS WORLD) மைதானத்தில் கடந்த 03.05.22ம் தேதி துவங்கி இன்று (08.05.22) வரை நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 70 ஆண்கள், பெண்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
தேர்வுப் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு 18 ஆண்கள்,18 பெண்கள் தேர்வு பெற்றனர். மேலும் தேர்வு பெற்றவர்களுக்கு நடந்த இறுதி போட்டியில்
ஆண்கள் 12, பெண்கள் 12 தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த போட்டியை ஒயிட் கிளவுட்ஸ் பள்ளி தாளாளர் சேதுராம், டைரக்டர் குமார், மாவட்ட கைப்பந்து கழக துணைத்தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சேது, மைக்ரோ கைப்பந்து செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் தங்கமணிகுமார், துணைசெயலாளர்கள் கிருஷ்ணண், விஜயகுமார், கீர்த்திசரண் ஆகியோர் செய்தனர்.
போட்டியில் தேர்வானவர்கள் மஹாராஷ்டிராவிற்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.