பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 121 குழந்தைகள் பங்கேற்ற உலக சாதனைக்கான பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில் உலக சாதனைக்காக சான்று வழங்கப்பட்டது.
திருப்பூர் கவிநயா நாட்டியப்பள்ளி சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏறடுத்தும் விதமாக 121 மாணவிகள் பரத நாட்டிய நடனமாடி உலக சாதனையை இன்று நிகழ்த்தினார்கள்.
3 வயது முதல் 18 வயது வரையிலான 117 மாணவிகள் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் பரத நாட்டிய நடனமாடி அசத்தினார்கள். இது குழந்தைகள் மற்றும் பெண்கள் குறித்த விழிப்புணர்வுக்கான உலகின் மிகப்பெரிய விழிப்புணர்வு பரத நாட்டிய நிகழ்ச்சியாக ராபா உலக சாதனை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கான உலக சாதனை சான்றிதழை திருப்பூர் மேயர் தினேஷ்குமார் கவிநயா நாட்டியப்பள்ளிக்கு வழங்கினார். மேலும் ஒவ்வொரு மாணவிகளுக்கும் தனித்தனியே சான்றிதழை மேயர் தினேஷ்குமார் வழங்கினார். இந்நிகழ்வில் இராபா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு ஆசிரியர் பிரசன்னா, கவிநயா நாட்டியப்பள்ளி ஆசிரியர் மேனகா, ஆசிரியை ஜெயந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.