10- ஆம் வகுப்பு மொழி பாடத் தேர்வு 42 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - பள்ளிக் கல்வித்துறை தகவல்.!

நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கியது.

முதல் நாளான இன்று நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 3,936 தேர்வு மையங்களில் 9.55 லட்சம் பேர் தேர்வு எழுதவிருந்த நிலையில், 42,024 மாணவர்கள் பங்கேற்கவில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது


Ahamed

Senior Journalist

Previous Post Next Post