தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்குகிறது. வருகிற 28ந்தேதி வரை இது நீடிக்கும் நிலையில், வரும் 24ந்தேதி வரை அனல் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
இதில் 1 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும். தேர்வு இல்லாத நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம். வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.