தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு வரும் மே 14 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 23 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், பிளஸ் 1 வகுப்புகளுக்கு ஜூன் 24 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை, தெரிவித்துள்ளது.