தீப்பெட்டி மூலப்பொருள்களின் விலை உயர்வினை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சட்டமன்ற த்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ தகவல்
கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயில் எதிர்புறமுள்ள தனியார் திருமண மண்டபம் அருகே அதிமுக நகரச் செயலர் முத்துராஜ் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, பழரசம் ஆகியவை வழங்கினார். நிகழ்ச்சியில் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த ஸ்ரீதர், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டச் செயலர் செல்வகுமார், முருகன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, கோவில்பட்டி இனாம்மணியாச்சி பைபாஸ் சாலையில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலர் சீனிராஜ், ஏற்பாட்டின் பேரிலும் பசுவந்தனை சாலை - வக்கீல் தெரு சந்திப்பில் நகர்மன்ற உறுப்பினர் வள்ளியம்மாள் மாரியப்பன் ஆகியோர் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜு எம்எல்ஏ திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், பழரசம், பழங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் சத்யா, அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ் , எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் சீனிராஜ், கோவில்பட்டி ஆவின் மில்க் தலைவர் தாமோதரன், மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, வழக்கறிஞரணி வடக்கு மாவட்டச் செயலர் சிவபெருமாள், வழக்கறிஞர் அணி ஜெய்சங்கர், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளர் வேலுமணி, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரஹாம் அய்யாத்துரை, பாலமுருகன், மகேஷ்பாலா, பழனிக்குமார், பத்மா, போடுசாமி, தங்கமாரியப்பன், அல்லித்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்...
திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை எதுவும் நிறைவேற்றவில்லை, மக்கள் சுமையை தான் தருகின்றனர். திமுக ஆட்சி விடியல் தரும் ஆட்சி என்றார்கள். ஆனால் இன்றைக்கு விடியா ஆட்சியாக இருக்கிறது.அதிமுகவில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு மூடு விழா நடத்தி வருகிறது..பட்ஜெட் கூட்டத்தொடரில் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் நிதியமைச்சர் வெளிநடப்பு செய்கிறார்.அதிமுக ஆளுங்கட்சியா , திமுக ஆளும் கட்சியா என்பது தெரியவில்லை.சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சொத்துக்களை விற்று தான் சொத்து வரியை கட்ட வேண்டிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இதனை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தும் மட்டுமின்றி சட்டமன்றத்தில் குரல் எழுப்பி மக்களை பாதுகாக்கும் கவசமாக அதிமுக செயல்படும் என்றும், சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு மத்திய அரசை சொல்லுவது சரியாகாது. மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்க நினைக்கின்றார்கள்.சொத்து வரி உயர்வு மட்டுமல்ல விரைவில் மின் கட்டணம் மற்றும் போக்குவரத்து கட்டணம் ஆகிவற்றை உயர்த்தி மக்களுக்கு பம்பர் பரிசு வழங்க அரசு காத்திருக்கிறது. ஆனால் இதனை தாங்கும் சக்தி மக்களுக்கு இல்லை.கொரோனா காலத்தினை கருத்தி கொண்டு அதிமுக ஆட்சியில் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை. வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள் அப்படித்தான் அதிமுக ஆட்சி மக்களுக்கு தற்போது தெரிகிறது. தீப்பெட்டி தொழிலுக்கு ஜி.எஸ்.டி வரிசலுகையை அதிமுக அரசு மத்தியரசிடம் வலியுறுத்தி பெற்று தந்தது. ஆனால் இன்றைக்கு திமுக அரசு தீப்பெட்டி மூலப்பொருள்களின் விலை உயர்வினை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தீப்பெட்டி ஆலைகளை மூட உற்பத்தியாளர்கள் முடிவு எடுத்துள்ளனர். இது குறித்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு கவன தீர்மானம் கொண்டு வரவுள்ளதாகவும், மக்களுக்கு நல்ல ஆட்சி தருவதை ராமராஜ்யம் என்பார்கள். இதைத்தான் அதிமுக தரும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். இது வேறு ஆன்மீகமும் மதமும் கிடையாது.திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.