அகம் மக்கள் சேவை துவக்கவிழா மற்றும் மரக்கன்றுகள் பரிசளிப்பு விழா


ஏப்ரல் 14

கோவை சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நீலம்பூர் குளத்தூர் கிராமத்தில் பொதுமக்களின் அத்தியாவசியக் குறைகளைக் களையவும், சுற்றுப்புற சுகாதாரச் சூழலைப் பாதுகாக்கவும், ஏழை எளிய மாணவர்களின் கல்விப்பணியை மேம்படுத்தவும், இயற்கை பேரிடர் காலங்களில் மருத்துவ உதவிகளை செவ்வனே செய்யவும், முதியோர்களுக்கான அரசு தரும் நலத்திட்டங்களை தாமதமாகாமல் பெற்றுத்தரவும், குளத்தூர் சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இளைஞர் ஜெகதீசன் ஒருங்கிணைப்பில் உருவான அகம் மக்கள் சேவை அமைப்பானது எங்கள் கிராமத்தின் தன்னார்வ இளைஞர்களின் பெரும் ஒத்துழைப்போடு உருவாகியிருக்கிறது 

சித்திரை மாத தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மலர்ச்செடிகளும், மூலிகைச்செடிகளும், மரக்கன்றுகளும் மஞ்சப்பையில் போட்டு ஊர்ப் பொதுமக்களுக்குக் கொடுத்ததோடு, இதை வளர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள், அதற்கு தேவையான உதவி ஏதேனும் உரம் அல்லது நீர் வசதி தேவைப்பட்டால் அவசியம் அழையுங்கள் உங்கள் வீட்டு பிள்ளைகளைப்போல வளருங்கள் என்று உரையாற்றினார் அகம் ஜெகதீசன் இவ்விழாவின் முத்தாய்ப்பாக முதல் மரக்கன்றை ஊராட்சி தொடக்கப்பள்ளியில் குழந்தைகளை வைத்து நடப்பட்டது என்று ஆர்வமாக சொன்னவர்,

இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில் நீலம்பூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் என் என் சண்முகசுந்தரம் சூலூர் ஒன்றியத்தின் ஏழாவது வார்டு கவுன்சிலர் தாரணி ஊர்ப்பெரியவர் செல்லக்குட்டி மற்றும் அகம் நண்பர்களோடு ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது பெரும் ஊக்குவிப்பாக இருந்தது என்று தெரிவித்தார்

Previous Post Next Post