ஜம்புலிபுத்தூர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதலிநரசிங்க பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கதலி நரசிங்க பெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையடுத்து ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் கோவிலை வலம் வந்து பல்வேறு சடங்குகள் முடிந்து  தீபாராதனை  காட்டப்பட்டது .ஒவ்வொரு நிகழ்வுகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய  நிகழ்வாக நேற்று கதலி நரசிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி ,பூதேவி சமேதரராக திருக்கல்யாண வைபவம் மாலை 4 மணி தொடங்கி வெகு விமர்சியாக நடைபெற்றது. அதை  முன்னிட்டு அனைவருக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. பெண்கள் தங்கள் மாங்கல்யத்தை. மாற்றி கட்டி கொண்டனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் தங்கலதா தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர். வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் திருத்தேர் ஊரை வலம் வந்து நிலையை அடையும். அதனையடுத்து புஷ்பப் பல்லக்கில் சாமி ஊர்வலம் நடைபெற்று சப்தாவரணம் நடைபெற்று ,விழா நிறைவு பெறும்.


Previous Post Next Post