விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ராமேஸ்வரத்தில் ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவி

  ராமேஸ்வரம் எஸ்.கே. பட்டியை சேர்ந்தவர் தரக்கூடியான் மற்றும் பார்வதி தம்பதியினர்  இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்,  இந்தப் பெண் குழந்தைகளில் மாலதி என்ற ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது, இந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மிகவும் எளிமையாக இருப்பதைத் தெரிந்த விஜய் மக்கள் இயக்கம், நகர் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்துடன் இணைந்து  கட்டில், பீரோ மெத்தை, உள்ளிட்ட ஏராளமான உதவிப் பொருட்களை மனமகள் வீட்டாரின் குடும்பத்தினருக்கு திருமண நாளான இன்று நேரடியாக வீட்டுக்கு சென்று உதவிகளை வழங்கினர். மேலும் மாதம் தோறும் இந்த குடும்பத்தினருக்கு  தேவையான உதவிகளையும் செய்து தருவதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் கோபி சாரதி,  பொருளாளர் மணி, மற்றும் விஜய் பாலா, தொண்டரணி ஏராளமானோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்.



Attachments area
Previous Post Next Post