நூற்றுக்கணக்கான பெண்கள் சீர் கொண்டு வர உற்சாகமாக நடந்த வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம்

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பம்மல் பஜனை கோயில் தெருவில் வீற்றுருக்கும்  ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண மகா உற்சவம் நடைபெற்றது.

இதில்  500க்கும் மேற்பட்ட பெண்கள், பக்தகோடிகள் சுவாமி திருக்கல்யாணத்திற்கு தேவையான பழங்கள், பூக்கள், பட்டுப்புடவை அங்க வஸ்திரங்கள், போன்றவைகளை சீர் வரிசை தட்டு எடுத்துக்கொண்டு ஊர்வலமாக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு வந்தனர்.

 அதன் பிறகு திருக்கல்யாண உற்சவம் மேளதாளம் முழங்க, பக்தகோடிகள் கோவிந்தா, கோவிந்தா என்று விண்ணை முட்டும் அளவிற்கு கோஷமிட்டு திருக்கல்யாணத்தை பக்தர்கள் கண்கொள்ளா காட்சியாக பார்த்து மகிழ்ந்தனர்,

 பிறகு பூஜைகள், சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் வெகு விமர்சியா நடைபெற்றது... விழாவை கௌரவத் தலைவர் ரங்கநாதன், புருஷோத்தமன், வழிநடத்த திருக்கோவில் நிர்வாக தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் நவநீதம் சேதுராமன், பொருளாளர் தர்மகத்தா  நாராயணன், ஆகியோர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையிலும் மற்றும் கோவில் நிர்வாகிகள்.. மனோகர், என் ரமேஷ், கிருஷ்ணன், மணிமாறன், எஸ் எஸ் மோகன், பி நரேஷ், கிரி ஆகியோர்கள், மற்றும் பக்தகோடிகள்  கலந்து கொண்டனர். 

அதன்பிறகு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Previous Post Next Post