விமான நிலையங்களிலும், விமானங்களிலும் முக கவசம் கட்டாயம்.! -சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் தகவல்.!

கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் நிலையில் டெல்லி, மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் நேற்று முதல் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவு விமான நிலையங்களுக்கும் விமானங்களுக்கும் பொருந்தாது என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அருண் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் முகமூடி அணிவது கட்டாயமில்லை,  ஆனால் தளர்வு விமான நிலையங்களுக்கும் விமானங்களுக்கும் இது பொருந்தாது. விமானப் பயணத்தின் போது முகமூடி அணிவது பரிந்துரைக்கப்படுகிறது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அருண் குமார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக கொரோனா பரவலை முன்னிட்டு அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இப்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்ததால் ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post