சாகர்மாலா திட்டத்தில் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் கடற்கரை சார்ந்த விளையாட்டுகள் - துறைமுக ஆணைய தலைவர் டி.கே.ராமச்சந்திரன் தகவல்.!


தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்தில் 9,955 கோடி ரூபாய் மதிப்பில் வெளி துறைமுக வளர்ச்சித் திட்டம், சரக்குதளம் 1,2,3,4-ஐ சரக்கு பெட்டக தளமாக மாற்றுதல் உள்ளிட்ட திட்ட பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட இருப்பதாக துறைமுக ஆணைய தலைவர் டி.கே.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு ஆணைய அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்  சகார்மாலா திட்டடத்தில் 7 ஆண்டுகளாக செய்யப்பட்டுள்ள சாதனைகள் குறித்து துறைமுக ஆணைய தலைவர் டி.கே.ராமச்சந்திரன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில் கடலோர சமூக மேம்பாடு, துறைமுகம் சார்ந்த தொழில் வளர்ச்சி, துறைமுக இணைப்பு, விரிவாக்கம், புதிய துறைமுகம் மேம்பாடு, துறைமுகத்தின் நவீனமயமாக்கல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு 

கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த  சாகர்மாலா திட்டத்தில் நாடு முழுவதும் 5.48 கோடி ரூபாய் மதிப்பில் துறைமுகங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் 2035 ஆம் ஆண்டிற்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதில் தூத்துக்குடி துறைமுகத்தில் ஆயிரத்து 135 கோடி ரூபாய் மதிப்பில் 11 திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டதில் இதுவரை 860 கோடி ரூபாய் மதிப்பில் இத்துறைமுகத்தில் கப்பல் நுழைவாயிலை அகலப்படுத்துதல், வடக்கு சரக்கு தளம் மூன்று அமைத்தல், 

உள்நாட்டு சரக்குகளை கையாளும் கப்பல் தளத்தின் கொள்ளளவை அதிகரித்தல், நிலக்கரி தளம் ஒன்றை மேம்படுத்துதல், சரக்குப் பெட்டக முனையம் மேம்படுத்துதல் உள்ளிட்ட 13 திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.  

இதன்மூலம் துறைமுகத்தின் கொள்ளளவு 40 மில்லியன் மெட்ரிக் டன் அதிகரித்துள்ளது என்று கூறினார். தற்போது 790 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மேலும் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் வெளி துறைமுக மேம்பாட்டு திட்டம், பழைய துறைமுகத்தை பொழுதுபோக்கு அம்சங்களுடன் நவீனப்படுத்தி படகு சவாரி அமைத்தல், நீர் விளையாட்டுக்கள் மற்றும் கடல் வனவிலங்கு சுற்றுலா தளங்கள் அமைக்க திட்டமிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக 965 ஏக்கர் இடத்தை துறைமுகம் ஒதுக்கி உள்ளது. 

மேலும் சாகர்மாலா திட்டத்தின் கடல்சார் சமூக மேம்பாட்டு திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது துறைமுகத்தின் கொள்ளளவை 114 மில்லியன் மெட்ரிக் டன் ஆக உயர்த்துவதற்காக 7500 கோடி ரூபாய் மதிப்பில் வெளி துறைமுக வளர்ச்சி திட்டம்,

2455 கோடி ரூபாய் செல்வில் சரக்குதளம் 1,2,3,4-ஐ சரக்கு பெட்டக தளமாக மாற்றுதல் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன இந்த பணிக்கு விரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் ஐந்தாண்டுக்குள் முடிவடையும் என்று அவர் தெரிவித்தார்.

துறைமுக ஆணைய துணை தலைவர் பிமல்குமார், தலைமை பொறியாளர் கே.ரவிகுமார், போக்குவரத்து மேலாளர் ஆர்.பிரபாகர், துறைமுக துணை காப்பாளர் கேப்டன் பிரவின் குமார் சிங், 

நிதி ஆலோசகர் மற்றும் கணக்கு அலுவலர் ஏ.கே.சாகு, துணை தலைமை இயந்திர பொறியாளர் நிகர் ரஞ்ஜன் போயி,மக்கள் தொடர்பு அலுவலர் சசிகுமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Previous Post Next Post