கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக 24 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் செண்பக மூர்த்தி ஏற்பாட்டில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி பழம் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 24 வது வார்டு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.
முன்னதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தூத்துக்குடி மண்டல அண்ணா தொழிற்சங்கம் போக்குவரத்து துறை மண்டல நிர்வாகிகள் கடம்பூரில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிராஜ்,
மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகரமன்ற உறுப்பினர்கள் கவியரசு, வள்ளியம்மாள் மாரியப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, கழகப் பேச்சாளர் பெருமாள்சாமி,
வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வழக்கறிஞர் சங்கர் கணேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் மகேஷ் பாலா, பழனி குமார், கோபி, முருகன்,பலர் கலந்து கொண்டனர்..