சத்தியமங்கலம் - ஏப்.10
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் கோவை- பெங்களூர் தேசிய நெடுஞ் சாலை, திம்பம் மலைப் பாதையில் இரவு நேரத்தில் இலகுரக வாகனங் கள் தவிர கனரக வாகனங்கள் செல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இப்பாதையில் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதியை வழங்க வலியுறுத்தி, சத்தியமங்கலத் தில் தனியார் திருமண மண்ட பத்தில், சத்திய மங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்க தலை வர் எஸ்.பி.எஸ்.பொன்னுசாமி தலைமையில், அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள்,
அனைத்து வாகன ஓட்டுநர்கள், உரிமை யாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது. இதில் பவானி சாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பி.எல். சுந்தரம் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர். நிறைவாக கூட்டத் தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வருகிற 11 ம் தேதி திங்கட்கிழமை சத்தியமங்கலத்தில்அனைத்து வணிக நிறுவனங்கள் உட்பட கடையடைப்பு நடத்துவது என்றும். அன்று ஈரோடு மாவட்டம் முழுவதுமுள்ள லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதுஎனவும்,பண்ணாரி சோதனைச்சாவடியில் லாரி உரிமையாளர்கள், வணிகர்கள்
அரசியல் கட்சியினர் பொது மக்கள்,விவசாயிகள் உள்ளிட் டோர் காத்திருப்பு போராட்டத் /தில் ஈடுபடுவது எனவும் தீர்மானிக்கப் பட்டு உள்ளது. இக் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.