திருப்பூர் கேத்தரின் சர்ச்சில் சிலுவைப்பாதை வழிபாடு

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டடு உயிர் நீத்ததை நினைவு கூறும்விதமாக --திருப்பூரில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் நடைபெற்ற சிலுவைபாதை வழிபாடு !! 

இயேசுு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-ஆம் நாள் உயிர்த்தெழும் நிகழ்வு ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது ஈஸ்டருக்கு முந்தைய 40 நாள்களை கிறிஸ்தவர்கள் தவக் காலமாக கடைப்பிடிப்பது வழக்கம்.

அதன்படிி, 40 நாள் தவக்காலம் கடந்த மார்ச் 2-ஆம் தேதி சாம்பல் புதனுடன் துவங்கி வருகிற 17 ந் தேதி ஈஸ்டருடன் நிறைவடைகிறது. இதில் முக்கிய நிகழவாக புனித வாரமாக இந்த வார கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக உலக மக்களின் பாவங்களை போக்குவதற்காக பெரிய வெள்ளிக்கிழமையன்று, இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாளான இன்று பெரிய வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தப்பட்டன. இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கின்ற இந்த பெரிய வெள்ளி சிலுவைப்பாதை வழிபாட்டில் ஏறாளமான கிறிஸ்துவர்கள் பக்தியுடன் கலந்து கொண்டனர்
Previous Post Next Post