தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் உலக மகளிர் தின விழா தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது விழாவில் சமூக நலன் மட்டும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநிலத் தலைவர் சண்முகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கழக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில துணைத் தலைவர் பிரேமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்!