இலங்கை -அவசர நிலை பிரகடனம் வாபஸ் - பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்.!


இலங்கையில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அரசுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. 

பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரரும், அதிபருமான கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கையில் நேற்று பாராளுமன்றத்திற்கு வெளியே திரண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிபரும், பிரதமரும் பதவி விலகி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் போராட்டக்காரரகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி தேதி முதல் நடைமுறையில் இருந்து வரும் அவசர நிலை வாபஸ் பெறப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். நள்ளிரவு முதல் அவசர நிலை சட்டம் திரும்பப் பெறப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post