ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்தில் கொளத்தூர் மாரியம்மன் திருக்கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 15ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி யது. இதனைத் தொடர்ந்து கோவிலின் முன்பு 20ஆம் தேதி கம்பம் நடப்பட்டு அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கம்பத்தை சுற்றி ஆடி மகிழ்ந்தனர். இந்நிலையில் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்று முடிந்த நிலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து, ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.