திராவிட மாதிரி ஆட்சியை தான் மு.க.ஸ்டாலின் கொடுக்கிறார். ஆனால், உண்மையான திராவிட ஆட்சியை கொடுத்தது அதிமுக தான் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.!


திமுக ஆட்சியின் பலமடங்கு உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், சொத்து வரி உயர்வு அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும், தீப்பெட்டி தொழில் மூடப்படும் அவலநிலையை உருவாக்கிய திமுக ஆட்சியை கண்டித்து 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் 


கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் திமுக ஆட்சியின் பலமடங்கு உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பின்னர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ  செய்தியாளர்களிடம்  கூறுகையில் :

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில், ரூ.4.10 லட்சம் கோடி தான் கடன் வாங்கி உள்ளது. ஆனால், இவர்கள் 10 மாத ஆட்சியில் ரூ.2.28 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். 

இதில், யாருடைய ஆட்சி சிறந்த ஆட்சி என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இது தான் இன்றைய பொருளாதார நிலை. காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினைகளுக்கு ஆளும் திமுகவுக்கு முழு ஆதரவை நாங்கள் கொடுப்போம். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என திமுகவினர் வலியுறுத்துகின்றனர். 

ஆனால், ஆளுநரை நேரில் சந்திக்கும்போது நல்ல ஆளுநர் என கூறுகின்றனர். இது இரட்டை வேடம். எங்களது ஆட்சியில் ஆளுநருடன் நல்ல இணக்கத்தில் இருந்தோம். மத்திய அரசுடன் நல்ல உறவுடன் இருந்தோம். உறவுக்கு கைக்கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பது அதிமுகவின் கொள்கை.

இவர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதால் மக்களுக்கு என்ன நன்மை. பெயரை மாற்றினால் ஒன்றிய அரசு என்றாகிவிடுமா. இவர்கள் அரசியல் செய்கின்றனர். திராவிட மாடல் ஆட்சி என்று கூறுகின்றனர். மாடல் என்றால் மாதிரி என்று பொருள். 


திராவிட மாதிரி ஆட்சியை தான் மு.க.ஸ்டாலின் கொடுக்கிறார். ஆனால், உண்மையான திராவிட ஆட்சியை கொடுத்தது அதிமுக தான், என்றார் அவர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,நகரச் செயலாளர் விஜய பாண்டியன்,இலக்கிய அணி இணைச் செயலாளர் சின்னப்பன், மாவட்ட அவைத்தலைவர் என்.கே.பெருமாள், 

ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யா, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் சீனிராஜ்,ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி என்ற காமாட்சி ஒன்றியச் செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி,

ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகரமன்ற உறுப்பினர்கள் கவியரசு,செண்பக மூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன்,

மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் பிரியா குருராஜ்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, கழகப் பேச்சாளர் பெருமாள்சாமி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜகுமார், 

நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, வழக்கறிஞர் சங்கர் கணேஷ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், 

முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், வார்டு பிரதிநிதி செந்தில், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி ஆரோக்கியராஜ், கமலா ரவிசந்திரன், பத்மாவதி,மகேஷ் பாலா,பழனிகுமார்,கோபி, முருகன்,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சொத்து வரி உயர்வை கண்டித்து கோஷங்கள் முழங்கினர்.

Previous Post Next Post