திட்டக்குடி நகராட்சியில் அரசு மருத்துவமனை, தாலுக்கா அலுவலகத்தில் குப்பைகள் அகற்றி சுத்தம் செய்யும் பணி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் இயங்கிவரும் அரசு மருத்துவமனை மற்றும் தாலுக்கா அலுவலகத்தில்  நகர்மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம் மற்றும் நகர்மன்ற துணை தலைவர் பரமகுரு  தலைமையில்  குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. 

இதனை தொடர்ந்து திட்டக்குடி நகராட்சியில் மொத்தம் 24நான்கு வார்டுகள் உள்ளன ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு வார்டாக அந்தந்த வார்டு கவுன்சிலர்களை முன்வைத்து குப்பைகள் அகற்றி சாக்கடைகள் தூர் வாரப்பட்டு வருகின்றனர். திட்டக்குடி நகராட்சியை சுகாதாரமான நகராட்சியாக மாற்ற முனைப்பு காட்டும் நகர்மன்ற தலைவருக்கும் நகர்மன்ற துணை தலைவருக்கும் பொதுமக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர். 
சுத்தம், சுகாதாரம் மக்களின் அடிப்படை உரிமை என்பதால் அதனை முதன்மை பணியாக செய்ய முன்வந்த தலைவர் மற்றும் துணை தலைவரை   விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 1வது வார்டு தி.இளமங்கலம் முகாம் செயலாளர் பிரேம்  பாராட்டு  தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post