கருப்பு திராவிடன் என்று சொல்லிக்கொள்ளும் அண்ணாமலை செயலால் அதை உணர்த்த வேண்டும்... கி.வீரமணி பேட்டி

கருப்பு திராவிடன் என்று சொல்லிக்கொள்ளும் அண்ணாமலை செயலால் அதை உணர்த்த வேண்டும்
கி.வீரமணி பேட்டி

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் திராவிடர் கழகம் சார்பாக நீட் தேர்வு எதிர்ப்பு , புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு , மாநில உரிமை மீட்பு பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது .

 இதில் திராவிடர் கழக தலைவர் கி வீரமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் . அப்போது தமிழகத்தில் நீட் தேர்வு என்னும் பெயரில் மத்திய அரசு சமஸ்கிரத கல்வி மற்றும் புதிய கல்வி கொள்கையை கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என பேசினார். 

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு இடையூறு செய்யும் விதமாகவும் ஆட்சியின் சிறப்புகள் சாதனைகள் தொடரக்கூடாது என  ஆளுநர் மூலம் சூழ்ச்சி செய்வதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார் , நீட் தேர்வு மசோதாவை காலதாமதம் செய்வது சரியல்ல , குடியரசுத்தலைவருக்கு அனுப்பவேண்டியது ஆளுநரின் கடமை.தவறினால் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் எனவும் இலங்கைக்கு மருந்து உணவுப்பொருட்கள் வழங்கி உதவி செய்ய தமிழக முதல்வர் பிரதமரிடம் அனுமதி கோரியுள்ளார்கள் , ஆனால் என்ன பதில் என இன்னும் தெரிவிக்கவில்லை.காஷ்மீர் பண்டிட்களுக்காக கவலைப்படும் ஒன்றிய அரசு தமிழர்கள் மேலும் மனிதாபிமான அடிப்படையில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்  உதவ முன்வரவேண்டும் என பேட்டியளித்த அவர் பாஜக தலைவர் அண்ணாமலை கருப்பு திராவிடன் என கூறியது அவர் கட்சிக்குள் உள்ள  பிரச்சனைகளுக்கு பதில் கூறியிருக்கிறார்  எனவும் ,  கருப்பு திராவிடன் என தோலை பார்த்து சொல்வதல்ல தோலை உயர்த்த வேண்டும் எனசொல்கிறோம் ,  நீட் தேர்வு , புதிய கல்விக் கொள்கை , மாநில உரிமை பறிப்பு உள்ளிட்டவற்றுக்கு ஆதரவாக இருக்கும் அண்ணாமலை வெறும் சொல்லால் அல்லாமல் கொள்கையால்,செயலால் கருப்பு திராவிடன் என்பதை உணர்த்த வேண்டும் எனவும் யாரையோ பயண்படுத்தி கட்சி வளர்க்கலாம் என்று  நினைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் பேட்டியளித்தார்.


 இந்த பொதுக்கூட்டத்தில் திமுக , காங்கிரஸ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் , மதிமுக உள்ளிட்ட கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post