பழனி நகராட்சிகளில் முதல் நகர்மன்ற கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழநி நகராட்சியில் நகர்மன்றக்கூட்டம் நடைபெற்றது. நகராட்சி உறுப்பினர்கள் வெற்றி பெற்றபின்பு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்போடு கூட்டம் துவங்கியது. நகர்மன்றத்தலைவர் உமா‌மகேஷ்வரி தலைமையில் நடந்த‌ முதல் நகர்மன்றக் கூட்டத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்களும்‌ கலந்துகொண்டனர்.  கூட்டத்தில் பழனி நகரின் 33வார்டுகளிலும் குடிநீர்‌ தேவையை‌ பூர்த்தி செய்வது, தெருவிளக்குகள் பராமரிப்பது, சாலைவசதி மற்றும் சாக்கடை அள்ளவது குறித்து விவாதிக்கப்பட்டது. 

தொடர்ந்து தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வு குறித்து நகர்மன்றம் சார்பில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் திமுக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.தொடர்ந்து கூட்ட அரங்கிற்கு மரபுகளை மீறி கோஷமிட கூடாது என தெரிவித்த நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி அதிமுக பெண் கவுன்சிலர் ஜெனத்துல் பிர்தௌஷை வெளியேற்றுமாறு தெரிவித்தார்.இதனையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் கருப்பு பட்டை,கருப்பு ரிப்பன் அணிந்து பதாகைகள் ஏந்தி கோஷமிட்டபடி வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நகர்மன்ற கூட்டத்தில்நகராட்சி ஆணையர் கமலா,பொறியாளர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.



Previous Post Next Post