கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொரக்கவாடி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருதாச்சலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் முனைவர் சுப்ரமணியன் பேராசிரியர் மற்றும் தலைவர் வழிகாட்டுதலின் படி முனைவர் ச. ஹரிசுதன் , உதவி பேராசிரியர் ( உழவியல் துறை) மூலம் மங்களூர் வட்டம் கொரக்கவாடி கிராமத்தில் முன்னோடி விவசாயி தனிகாசலம் வயலில் எள் பயிரில் வயல்வெளி முன்னிலை செயல்விளக்கம் செய்யப்பட்டது.
புதிய எள் சாகுபடி முறையில் தணிகாச்சலம் வரிசை விதைப்பு செய்துள்ளார். இவ்முன்னிலை செயல் விளக்கத்தை ஜே எஸ் ஏ வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களும் மற்றும் முனைவர் கு .வடிவேல் , உதவி பேராசிரியர் மரபியல் மற்றும் இனப்பெருக்க துறை, வே.மோகன் பயிர் வினையியல் துறை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்தாலோசித்தனர்.
இப்புதிய எள் சாகுபடி முறையை அருகாமையில் உள்ள கிராமத்து விவசாயிகள் பார்வையிட்டனர்.