மாநில வளர்ச்சியில் எதிர்க்கட்சிகள் எவ்வித அரசியல் செய்ய வேண்டாம் முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது சொத்து வரி உயர்வு குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கமளித்து பேசினார்.
"மாநகராட்சி நகராட்சி சொத்துவரி சீராய்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை தலைவர்கள் கொண்டு வந்துள்ளனர்
சொத்து வரி உயர்வை இந்த அரசு மனமுவந்து செய்யவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காது என்று கூறும் பொழுது அதனை சமாளிக்கும் கட்டாயத்திற்கு இந்த அரசு தள்ளப்படுகிறது. மக்களின் வளர்ச்சி திட்டங்கள் தேக்கமடையும் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது.
இப்பொழுது அனைத்து கட்சி சார்பிலும் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ளனர் அவர்கள் அப்பகுதிகளில் ஆற்ற வேண்டிய பணிகளுக்கு அரசிடம் நிதி எதிர்பார்ப்பார்கள். எனவே ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் பணிகள் தேக்கம் அடைந்துள்ளது என்பதை மனதில் கொண்டு கட்டிடங்களின் பரப்பளவிற்கு ஏற்றவாறு பிரித்து வரி விதிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள குடியிருப்புகளில் பொருளாதார அடிப்படையில் பார்த்தால் 86 விழுக்காடு இந்த வரி விதிப்பு பெரிதாக பாதிக்காது. அடிப்படை தொழில் செய்யும் விவசாயத்திற்கு நிதி ஆதாயம் அவசியம் தேவை.தற்போதைய நிதி ஆதாரத்தை கொண்டு எதையும் செய்ய முடியாத காரணத்தினால் இந்த வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது.
கட்சி வேறுபாடின்றி அரசு எடுக்கும் முடிவுகளுக்கு மக்கள் நலத்திட்டங்களை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகள் துணை நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்திட வேண்டாம் என எதிர்க் கட்சிகளுக்கு கேட்டுக்கொள்கிறேன்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக, பாஜக கட்சிகள் வெளிநடப்பு செய்தன.