"போன் நம்பர் கொடுக்காமல் பேன்ட் வாங்க முடியாதா "?- தனியுரிமை மற்றும் நுகர்வோர் சட்ட மீறல் என புகார்

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா வெளியிட்ட டுவிட்டர் பதிவில்..,

https://twitter.com/MahuaMoitra/status/1519570439609094145?t=WJyNiQwfO0AFyIyA1CvjVA&s=19

‘டெல்லியின் அன்ஷால் பிளாசாவில் உள்ள டெகாத்லான் ஷோரூமிற்கு நேற்று சென்றேன். எனது தந்தைக்கு ரூ.1499க்கு பேன்ட் வாங்க விரும்பினேன். இந்த பேன்டை வாங்குவதற்கு என்னுடைய செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியைக் கொடுக்க வேண்டும் என்று கடையின் மேலாளர் கூறினார்.

அவர்கள் தனியுரிமைச் சட்டங்களையும், நுகர்வோர் சட்டங்களையும் மீறுகின்றார்கள்.அதனால் பேன்ட் வாங்கவில்லை. இந்த கடைக்கு இதுவரை ஒரு முறை மட்டுமே ஷாப்பிங் செய்துள்ளேன். எனது தனிப்பட்ட விவரங்களை அவர்களிடம் கொடுக்க நான் விரும்பவில்லை. இந்தியா முழுவதும் இதுபோன்று வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களை சில நிறுவங்கள் வாங்குகின்றன. இதுபோன்ற நிறுவனங்கள் இந்திய மக்களை முட்டாளாக்குவதாகவே உணர்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post