இந்திய குடியரசு கட்சியினர் பட்டியலினருக்கு பட்டா அளவீடு செய்து தர வேண்டி ஆர்ப்பாட்டம்

   வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே இந்திய குடியரசு கட்சியின் சார்பில் கல்லேரி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்ட சுமார் 230 பேருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு கல்லேரி கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த நிலத்தை அளவீடு செய்து தர வேண்டி  இந்திய குடியரசு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட இணைச்செயலாளர் ஜூ.சாமு(எ)புஷ்பராஜ் தலைமை வகித்தார். எஸ்.கதிரேசன் வரவேற்புரை ஆற்றினார்.


 இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட தலைவர் இராசி.தலித் குமார்  ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநில இணைப் பொதுச் செயலாளர் க.மங்கா பிள்ளை ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினார். மேலும் நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் எஸ். வெங்கடேசன் மாவட்ட அமைப்பாளர் அ.தென் காந்தி , மாவட்ட துணைத்தலைவர் எ.வீரேந்தர், மாவட்ட துணைத்தலைவர் ஜூ.தமிழ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.யுவராஜ், மாநில சான்றோர் அணி மா.கார்த்திகேயன் , மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஆர் .பாபு(எ)பரந்தாமன், குடியாத்தம் ஒன்றிய செயலாளர் ஆர் .நாகராஜ் ,  நகர அமைப்பு செயலாளர் எஸ் .மூர்த்தி,  ஒன்றிய இளைஞரணி தலைவர் டி.நரேஷ் , நகர பொருளாளர் சி.வெங்கடேசன் மற்றும் கட்சியின் நகர ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நூற்றுக்கும் மேலானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பின்பு அனைவரும் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் தலித் குமார் தலைமையில் அனைவரும் சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


Previous Post Next Post