தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் எரிவாயு சிலிண்டர், இருசக்கர வாகனங்களுக்கு மாலை போட்டு பெண்கள் ஓப்பரியுடன் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்,டீசல் விலையேற்றத்திற்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து நூதன முறையில் எரிவாயு சிலிண்டர், இருசக்கர வாகனங்களுக்கு மாலைபோட்டு பெண்கள் ஒப்பாரியுடன் ஆர்பாட்டம் நடைபெற்றதுஇதில் காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி.மனோகரன், நகர செயலாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் பங்கேற்று கண்டனகுரல் எழுப்பினார்கள்.