தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் - அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தி வெளிநடப்பு.!


தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து இன்று  நடைபெற்றது.


கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலையில் நடைபெற்றது 


கூட்டத்தில் முன்னாள் வாரிய தலைவர் அமிர்தகணேஷ்   இறப்புக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது 

தொடர்ந்து கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுகவினர்க்கு முன் இருக்கையில் இடம் தராமல் பின் இருக்கையில் அமர வைத்தாக புகார் தெரிவித்தனர்.


இது குறித்து அதிமுக எதிர்க்கட்சி தலைவர் வீரபாகு மேயரிடம் வலியுறுத்திய போது அவர் இதனை பொருட்படுத்தி பேசும் போது திமுக கவுன்சிலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்து அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து கோஷங்கள் முழங்கியவாரே வெளிநடப்பு செய்து மாநகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.. 


பின்னர் அதிமுக எதிர்க்கட்சி செயலாளர் எஸ்.பி.எஸ் ராஜா செய்தியாளர்களிடம்  பேசுகையில்,  

கூட்டத்தில் தங்களுக்கென இருக்கை கொடுக்காமல் வஞ்சிகின்றனர். இதனை மேயரிடம் முறையிட்டும் அவர் எங்களை நிராகரிகிறார் ஏழை, எளிய நடுத்தர மக்களை திமுக அரசு வஞ்சிகிறது. 


கொரோனா கால கட்டத்தில் இருந்து மீண்டு வரும் வேலையில் மக்களிடம் சொத்து வரி உயர்த்தியது வேதனையளிக்கிறது. என கூறிய அவர், இதனை எதிர்த்து கேட்டால் எதிர் கட்சியான எங்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்க மறுகிறார்கள்.. இதற்காக நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என கூறினார்.

தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான கோரிக்கைகளை  மேயரிடம் முன் வைத்தனர். இருந்த போதும் சொத்துவரி உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது

Previous Post Next Post