வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் தாலுகா மாளிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள தோசலம்மன் திருவிழா முன்னிட்டு மாடு விடும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழா சிறப்பு அழைப்பாரக சப்கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் சரண்யா,துணை வட்டாட்சியர் பலராமன் வருவாய் ஆய்வாளர் ஆனந்தம்,மேட்டுக்குடி வினோத் குமார். ராஜேஷ் மணியம்,ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி ,விஏஓ குமார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் முன்னிலையில் மாளிப்பட்டு தோசலம்மன் திருவிழாவும், மாடு விடும் திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் மாடுகள் போட்டி இலக்கை குறைந்த புள்ளிகள் கடந்து சென்று முதல் பரிசு ரூ 1.25.இலட்சம் தங்க தளபதி காளைக்கும் இரண்டாம் பரிசு ரூ 1 இலட்சம் நிம்மியம்பட்டு காளைக்கும் மூன்றாம் பரிசு ரூ 75000.ஆயிரமும் பொல்லாதவன் காளைக்கும் 4வது பரிசு ரூ 50000 மும் லாவண்யா எக்ஸ்பிரஸ் லிங்கா காளைக்கும் முறையே மொத்தம் 51 பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சுமார் 18 பேருக்கு லேசான காயமும், 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, நான்கு பேரில் அடுக்கம்பாறை அரசினர் மருத்துவமனைக்கும் 3 பேர் குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கும் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் முன்னர் எவ்வாறு மதியம் 2 மணிக்கு மாடு விடும் திருவிழா நடத்திட வேண்டும் என்று மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர் எதிர்பார்ப்பாக உள்ளது. காலை வேலையில் மாடு விடும் திருவிழா மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.