வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில், 25ம் தேதி நடைபெற உள்ள வனத்துறை மானிய கோரிக்கையில், வனப் பகுதி களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் திம்பம் மலைப்பாதை போக்குவரத்து தடை குறித்து விவாதித்து தமிழக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத் தியுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு சிபிஐ மாநிலக் குழு சார்பில் பழங்குடியினர் வனம் சார்ந்து வாழ்வோரின் வாழ்வுரிமை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்துகொண்டு பேசிய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் திம்பம் மலைப்பாதை போக்குவரத்தால் வனவிலங்குகள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை. எனவும், திம்பம் மலைப் பாதையில் இரவு நேரத்தில் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து தடையால், மலைவாழ் மக்களுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
தமிழகத்தில் உள்ள 20 முக்கிய மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியில் வாழும் மக்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக்கூடாது என தற்போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மலைப்பகுதியில் வாழும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் இந்த தடையின் காரணமாக மலைப் பகுதியை சார்ந்திருக்கும் மக்கள் தங்கள்கால்நடைகளை பராமரிப்பதில், மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 2006ஆம் ஆண்டுமலைப் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பதற்கு நாடாளுமன்றத்தில் தனி சட்டம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு அடிப்படை காரணம் அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் அல்லது வனத்துறை அதிகாரிகள் எதார்த்த உண்மைகளை நீதிமன்றத்தில் எடுத்துரைக்காத காரணத்தினால், தற்போது நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கி உள்ளதாக வும் தெரிவித்தார். எனவே வரும் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் வனத்துறைமானிய கோரிக்கையில் வனப்பகுதி யில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் திம்பம் மலைப்பாதை போக்குவரத்து தடை குறித்து விவாதித்து தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அப்படி மானியக் கோரிக்கையில் நல்ல முடிவு எட்டப்படாத நிலையில் வரும் மே 9ம் தேதி 20 மாவட்டங்களில் உள்ள மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் முன்பு திரளான மக்கள் ஒன்று கூடி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என தெரிவித்தார்.