கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மூப்பன்பட்டியில் அரசு நீர்நிலை புறம்போக்கு தனிநபர் ஆக்கிரமிப்பை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மூப்பன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1.68.00 ஹெக்டர் அரசு நீர்நிலை புறம்போக்கை சுமார் 10க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியும், விவசாயம் செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜுக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், கோவில்பட்டி வட்டாட்சியர் அமுதா தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் காளிமுத்துசேகர், மூப்பன்பட்டி ஊராட்சி தலைவர் லிங்கேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் 

பொக்லைன் இயந்திரம் உதவியுடன் நீர்நிலை நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இப்பணி தொடர்ந்து நடைபெறும் என்றும், நீர்நிலை ஆக்கிரமிப்பை முழுமையாக மீட்கும் பணி ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிவடையும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

Previous Post Next Post