இந்தோனேஷியாவை உலுக்கிய சமையல் எண்ணெய் தட்டுப்பாடு.! - நாடாளுமன்றம் விசாரனை.!

  

உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய் உற்பத்தி செய்யும் நாட்டை உலுக்கிய சமையல் எண்ணெய் தட்டுப்பாடு தொடர்பாக வர்த்தக அமைச்சக அதிகாரி மற்றும் மூன்று பாமாயில் உற்பத்தி அதிகாரிகள் மீது இந்தோனேசிய வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உள்நாட்டு கட்டுப்பாடுகளை மீறி சந்தையின் தேவைக்கு விநியோகிக்காமல் சர்வதேச அளவில் கச்சா பாமாயிலை வரலாறு காணாத விலைக்கு விற்க ஏற்றுமதி அனுமதிகளைப் பெற சதி செய்ததால், உலகில் உள்ள பாமாயிலில் பாதிக்கும் மேலான பாமாயிலை உற்பத்தி செய்யும் நாட்டில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு மக்கள் மத்தியில் பரவலான கோபத்தை தூண்டி விட்டுள்ளது. 

சமையல் எண்ணெய் வாங்குவதற்காக தனது உள்ளூர் கடையில் அதிகாலை 4 மணி முதல் மக்கள் வரிசையில் நிற்கத் தொடங்குகின்றனர். அதிர்ஷ்டம் இருந்தால் எண்ணெய் கிடைக்கும்.   கிழக்கு கலிமந்தனில், இந்தோனேசியாவின் ஐந்தில் இரண்டு பங்கு பாமாயிலை உற்பத்தி செய்யும் போர்னியோவில், இந்த மாதத்தில் குறைந்தது இரண்டு இல்லத்தரசிகள் வரிசையில் நிற்கும் போது இறந்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய பாமாயிலை உற்பத்தி செய்யும் இந்தோனேசியாவில் சமையல் எண்ணெயின் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .

அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஏப்ரல் 19 அன்று, பெர்மாட்டா ஹிஜாவ் குழுமம், வில்மர் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு கச்சா பாமாயில் (சிபிஓ) ஏற்றுமதி செய்வதற்கான அனுமதிகளை வழங்கியதற்காக வர்த்தக அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் இந்திராசாரி விஸ்னு வர்தனா மீது குற்றம் சாட்டியதாக அறிவித்தது.

இந்த தட்டுப்பாடு பொதுமக்களிடமிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் பரவலான புகார்கள் வரப் பெற்றதையடுத்து, உலகின் கச்சா பாமாயிலில் பாதிக்கும் மேற்பட்டவற்றை உற்பத்தி செய்யும் இந்தோனேசியாவில், சமையல் தாவர எண்ணெயின் ஆதிக்க ஆதாரமாக உள்ள இந்தோனேசியா ஏன் உள்நாட்டு விநியோகம் இல்லாமல் போகிறது என்பது குறித்து நாடாளுமன்றம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post