நடிகர் பரத் நடித்த “நடுவன்” திரைப்படம் தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு

 நடிகர் பரத் நடித்த “நடுவன்” திரைப்படம் 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவவிற்கு  அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

இது குறித்து இயக்குனர் ஷரன் குமார் கூறுகையில்.. ,

12வது தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழா 2022 க்கு எங்கள் படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கேட்டு, எங்கள் குழு  மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது.  எனது தயாரிப்பாளர் லக்கி சாஜர்,  நடிகர் பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆகியோருடன், நான் நினைத்தது போலவே படத்தை வடிவமைக்க, தூணாக இருந்த ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினருக்கும் இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய மரியாதைகள், நல்ல உள்ளடக்கம் சார்ந்த கதைகளை இயக்கவும், சிறந்த படங்களை தொடர்ந்து  வழங்கவும் பெரும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தருகிறது.

செப்டம்பர் 21, 2021 முதல் SonyLIV இல் ‘நடுவன்’  திரைப்படம் நேரடி ஓடிடி பிரீமியராக ஒளிபரப்பப்பட்டது. 

Previous Post Next Post