தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை; ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 2022-23 ம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

இலவச மற்றும்  கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் இலவசமாக ஏழை மற்றும் சிறுபான்மையினரின் குழந்தைகள் பயிலுவதற்கான சட்டமானது அமலில் உள்ளது. எனவே அதன்படி நடப்பாண்டில் இன்று முதல் மாணவர் சேர்க்கையானது இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

எல்.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம் என்பது இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். இத்திட்டத்தை பயன்படுத்த வரைமுறைக்குள் உள்ள பெற்றோர்கள், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று  தெரிவிக்கப்பட்டது.

மே மாதம் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டது. rte.thschools.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பெற்றோர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. சிறுபான்மையினர் அந்தஸ்தை பெறாத அனைத்து விதமான நர்சரி, பிரைமரி, மெட்ரிக்,ICE மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளிலும் இலவசமாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சாரிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் முன்னுரிமை என்பதை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், ஆதரவற்றோரின் பிள்ளைகள், எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 3-ம் பாலினத்தவர் உட்பட துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முன்னரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Ahamed

Senior Journalist

Previous Post Next Post