பொது கிணற்றை தனி நபருக்கு பட்டா வழங்கிய அரசு அதிகாரிகள் : பொதுமக்களை திரட்டி போரட்டம் - அமமுக நிர்வாகி ஆட்சியருக்கு மனு.!
தூத்துக்குடியில் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த கிணற்றை தனிநபருக்கு பட்டா வழங்கிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமமுக நிர்வாகி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அமமுக 30வது வட்ட செயலாளர் நடிகர் காசிலிங்கம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாநகராட்சி 30வது வார்டில் டூவிபுரம் 3வது தெருவில் பல ஆண்டுகளாக ஈம சடங்கு செய்வதற்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கிணறு இருந்தது. தற்போது கிணற்றை ஆக்கிரமித்து, தனி நபருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு கிணற்றை தனி நபருக்கு பட்டா வழங்க அரசு அதிகாரிகள் பலர் உடந்தையாக இருந்துள்ளனர். அரசு நிலத்திற்கு பட்டா வழங்கிய அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி இது தொடர்பாக போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.