மக்கள் போராட்டம் - இலங்கை பிரதமர் ராஜபக்சே ராஜினாமா.! - ராஜினாமாவை ஏற்க இலங்கை அதிபர் மறுப்பு.!

பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் மக்கள் போராட்டம் வலுத்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜப்க்சாவிடம் மகிந்த ராஜபக்ச வழங்கினார். மகிந்த ராஜபக்ச அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்க இலங்கை அதிபர் கோட்டாபய ராஜப்க்சா மறுப்பு தெரிவித்துள்ளார். 

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறியதாக, ஜனாதிபதி பதவி விலகக் கோரி இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தைப் பிறப்பித்துள்ளார். இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால சட்டம் மனித உரிமை மீறல் என்று இலங்கை மனித உரிமை ஆணையக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளார். இதை அடுத்து தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜப்க்சாவிடம் மகிந்த ராஜபக்ச வழங்கினார். மகிந்த ராஜபக்ச அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்க இலங்கை அதிபர் கோட்டாபய ராஜப்க்சா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி இலங்கை அரசிலிருந்து விலகுவதாக சுதந்திர கட்சியை சேர்ந்த 14 எம்.பிக்கள் அறிவித்துள்ளனர். 


Ahamed

Senior Journalist

Previous Post Next Post