வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 500 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முறையான குடிநீர் சப்ளை இல்லையாம். மேலும் அப்பகுதி மக்களுக்கு நூறு நாள் வேலை கொடுப்பதில் அலட்சியம் காட்டுவதாகவும், தகுதி உள்ள நபர்களுக்கு பணி தரவில்லையயாம். இதுகுறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் லத்தேரி ரயில்வே கேட் அருகில், லத்தேரி - திருமணி சாலையில் காரில் வந்துக்கொண்டிருந்த கே.வி.குப்பம் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், கவுண்சிலர் ஜெயா முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் மோகன் உள்ளிட்டோரை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த லத்தேரி சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலிசார், வி.ஏ.ஓ தமிழ்வாணன் , துணை பி.டி.ஓ ஆனந்தஜோதி லஷ்மி, பொறியாளர் பிரிமிளா, ஊராட்சி செயலாளர் விசுவநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களை சமரசம் செய்தனர். சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னரும், ஒன்றிய குழு தலைவர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னருமே அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழல் காணப்பட்டன.