சென்னை, பக்கிங்காம் கால்வாய் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற 2011-ல் தனி நபரால் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பேரில் 2015-ல் 625 வீடுகள் இடிக்கப்பட்டன; மீதமுள்ள 259 வீடுகளை 2022 ஏப்ரல்-க்குள் இடித்து ஆக்கிரமிப்புகளை மீட்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது, ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர்ப் பகுதி ஆக்கிரமிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதி மக்களை வெளியேற்றி அவர்களின் வீடுகளை இடிக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் துவங்கியிருக்கின்றனர்.
நெடுங்காலமாக அங்கு வசித்துவரும் மக்கள் தங்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். காவல்துறை உதவியோடு அவர்களை அப்புறப்படுத்திய பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
ஏழைகள் குடியிருக்கும் ஒன்டு குடித்தன குடிசைகளை இடிக்க அவசர நடவடிக்கை எடுக்கும் அரசும், நீதிமன்றமும், வல்லம்:தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரத்தில் இயங்கி வரும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தமிழக அரசின் திறந்த வெளிச்சிறைக்கு சொந்தமான நிலத்தில் 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 கட்டிடங்களை கட்டி உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு கடந்த 2018 அக்டோபர் 3ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்ததும் இன்னும் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படாதது ஏன் என பொது மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
கடந்த 22.10.21 அன்று சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் எவ்வளவு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு ஆய்வுக்குழு செய்தனர். தொடர்ந்து, தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று சாஸ்த்ரா பல்கலைக்கழக பிப்ரவரி மாதம் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில்,‘‘‘‘நான்கு வாரங்களுக்குள் (24.03.2022) ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வேண்டும்’’’’ என தெரிவிக்கப்பட்டது, ஆனாலும் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலே உள்ளது குறித்து பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
#Chennai #BuckinghamCanal