சென்னை அடுத்த வண்டலூர் கிரஸண்ட் கல்லூரியில் பி.எஸ்.அப்துல் ரகுமான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய திட்டனமான இண்டெல் உன்னதி தகவல் மைய ஆய்வகத்தை தகவல் தொடர்பு துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்து. ஆய்வகத்தில் மாணவர்களின் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு கண்டுபிடிப்புகளின் தன்மை குறித்து கேட்டறிந்தார். அமைச்சருடன் இண்டெல் இயக்குநரான முனைவர் சுமீத்வர்மா இணைந்து மாணவர்களுக்கு உபயோகபடுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் பல அமைச்சகத்தில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் பேசுகையில் இவ்வகை ஆய்வகங்கள் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருப்பதோடு பல மாணவர்கள் ஸ்டார்ட் அப் தொடங்க வழிவகுக்கும் எனவும் இதன் முலம் ஸ்டார்ட் அப் சுற்று சூழலில் புரட்சி ஏற்பட்டு தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும் என நம்பிக்கை தெரிவித்தார். ஆய்வகத்தில் இண்டெல் மற்றும் சி.ஐ.ஐ.சி முயற்ச்சியை பெரிதும் பாராட்டினார். மேலும் சி.ஐ.ஐ.சி யின் தலைமை நிர்வாகி பார்வேசலம் பேசுகையில் சட்டங்களின் எண்ணிக்கையை கூட்டுவதும், தமிழ் நாட்டின் ஜிடிபி ஐ உயர்த்துவதில் சி.ஐ.ஐ.சியின் பங்கு இருக்கும் என தெரிவித்தார். ஆய்வகத்தில் மிக சிறந்த கண்டுபிடிப்புகளுகு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்கள் ஆரிப், புகாரி ரகுமான், அப்துல்காதர், அப்துர் புகாரி ரகுமான் , முனைவர் பீர்முகமது, முனைவர் அசாத், முனைவர் ராஜா உசைன் உட்பட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.