பண்ணாரி கோவில் அருகே தனியாய் வந்து தாகம் தனித்த குட்டியானை-வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் , சத்திய மங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான யானைகள், சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டு பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள்உள்ளன.தற்போது கோடைகாலம் என்பதால், குடிநீர் தேவைக்காகவும், உணவு தேடியும் யானைகள் காட்டை விட்டு வெளியேறி, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து பயிரை சேதப் படுத்து வதும், குடிநீர் அருந்தி விட்டு செல்வதும் சகஜமான ஒன்று. அவ்வாறு இன்று அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர் கள் பண்ணாரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த னர். பண்ணாரி கோவிலுக்கு மிக அருகில் உள்ளபாலத்தின்   கீழே மழைநீர் தேங்கி உள்ளது மாலை சுமார் 6 மணியளவில், குட்டி யானை ஒன்று தாகம் தீர்க்க, நீர் தேங்கிய பகுதிக்கு தனியாக வந்து, நீர் அருந்த உள்ளே இறங்க முயற்சித்து நீர் தேங்கி இருந்த பகுதியை சுற்றி, சுற்றி வந்தது. பின்னர் ஒரு வழியாய் நீர் வழிப்பாதை வழியே நீர் தேங்கிய பகுதிக் குள் இறங்கி, நீரை உறிஞ்சி தன் மேல் தெளித்தது பின்னர் மெல்ல, மெல்ல நீர் பகுதிக்குள் இறங்கி சுமார் 10 நிமிடம் தாகம். தீர தண்ணீரை உறிஞ்சி குடித்தது. அப்போது இருமுறை சத்தமாக பிளிறியது. பின்னர் சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் வேகமாக பிளறியது குட்டியானை பிளிறிய சத்தம் கேட்டு, வனப் பகுதிக்குள் இருந்து யானை பிளிறிய சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட குட்டியானை மெல்ல, மெல்ல நகர்ந்து சத்தம் வந்த திசை நோக்கி வனத்திற்குள் சென்று மறைந்தது. திடிரென சாலை யோரம் குட்டியானை நீர் அருந் துவதைக் கண்ட அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் வாகன ங்களை நிறுத்திவிட்டு தங்க ளது செல்போனில் படம் பிடித் தும்,குழந்தைகளுக்குயானையை காட்டி மகிழ்ந்தனர். அவ்வழியே வந்த வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் பொதுமக்களைஅப்புறப்படுத்தியும், எச்சரிக்கை செய்தும் அனுப்பினர்.



Attachments area
Previous Post Next Post