சத்தியமங்கலம் பண்ணாரி அம்மனின் சகோதரியாக கருதப்படும் தண்டு மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா - பக்தர்கள் சாமி தரிசனம்

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள வடக்கு பேட்டை பகுதியில் தண்டு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.ஆண்டு தோறும் சித்திரை மாதம் இக்கோவிலில் ஆயிரக் கணக் கான பக்தர்கள் பங்கேற்கும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இக் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெறவில்லை.

இந்நிலை யில் பண்ணாரி அம்மனின் சகோதரியாக கருதப்படும் தண்டு மாரியம்மன் கோவில் குண்டம் திரு விழா இந்த ஆண்டு கடந்த 6-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி யது.பின்னர் கடம்பூர் மலைப் பகுதியில் உள்ள கானகுந்தூர் கிராமத்தில் இருந்து கோவிலின் முன்பு கம்பம் அமைக்க மரம் எடுத்து வரப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து 7ஆம் தேதி இரவு கோவிலின் முன்பு கம்பம் நடப்பட்டது. பின்னர் கோவிலின் முன்பு நடப்பட்டி ருந்த கம்பத்திற்கு தினமும் காலை அப்பகுதி பெண்கள் நீர் ஊற்றி தண்டுமாரியம் மனை வழிபட்டு வந்தனர். மேலும் மாலை தொடங்கி இரவு முழுக்க இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மேள தாளங்களுடன் கம் பத்தைச் சுற்றி தினமும் ஆடி மகிழ்ந்தனர்.இதனைத் தொடர்ந்து, சுமார் ஐநூறுக்கும் மேற் பட்ட பெண்கள் பவானி ஆற்றில் தீர்த்தக்குடம் எடுத் தும், சாமி முத்து பல்லக்கு பூந்தேரை இழுத்தும், ஊர்வலமாக வந்து கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். 

பின்னர் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து, இரவு கோவிலின் முன்பு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய மரத்துண்டுகளை கொண்டு தீக்குண்டம் அமைக்கப்பட்டது. பின்னர் காலை பவானி ஆற்றிலிருந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அம்மன் குதிரை வாகனத்தில் ஆலயத்தில் எழுந்தருளியதும். காலை சுமார் 8 மணியளவில் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தை சுற்றி, கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து, பூசாரி கோகுல் முதலில் குண்டம் இறங்கினார். அதன்பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டபொதுமக்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பெண்கள் தங்கள் கைக் குழந் தைகளுடன் குண்டம் இறங்கி, சாமியை வழிபட்டனர். இக் கோவிலில் குண்டம் இறங்க வந்த பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டும், சுவாமி பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப் பட்டது. சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் நெப்போலியன் தலைமையில் காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சத்தி போக்கு வரத்து காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் அத்தாணி சாலை, ஆற்று பாலம், மைசூர் தேசிய நெடுஞ்சாலை, வடக்கு பேட்டை பகுதியில் போக்குவரத்தை ஒழங்குப்படுத்தினர்.


Previous Post Next Post