கொமாரபாளையம் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் குடிநீர் திட்டபணிகள் ஆய்வு

  2024  ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடியிருப்புகளுக்கும், வீட்டு குழாய் இணைப்பு மூலம தூய்மையான   குடிநீர்  வழங்கி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டமான ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மத்திய மாநில அரசுகள் இணைந்து   செயல்படுத்தக்கூடிய திட்டம் ஆகும். இதன் மூலம் மக்களுக்கு போதுமான தரமான, சுகாதாரமான    குடிநீர்  கிடைக்கப் பெறுவதுடன்,  குழந்தைகளும் பெண்களும் பெருமளவில் இத்திட்டத்தால் பயன்பட உள்ளனர்.

சத்தியமங்கலம் கொமாரபாளையம் ஊராட்சியில்  இத்திட்டம் மூலம் 15 குடியிருப்பு பகுதிகளில் 3 ஆயிரத்து 356 வீடுகளுக்கு 3 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்ட பணிகளை  கொமாரபாளையம் ஆதி திராவிடர் காலனி பகுதியில் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம் .சரவணன், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ரமேஷ், வளர்ச்சிக்குழ உறுப்பினர் ராசு என்கிற முனுசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர். 95% பணிகள் முடிவுற்ற நிலையில் விரைவில் விடுபட்ட குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க அரசின் அனுமதிக்காக  காத்திருப்பதாக ஊராட்சிமன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் பி.காம். தெரிவித்தார்.

Previous Post Next Post