தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைகாலத்திற்குள் அனைத்தும் முடிவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும். எவ்வீத இடையூறு இல்லாமல் முழுமையாக பணிகள் நல்ல முறையில் பணி செய்திட வேண்டும் என்று ஏற்கனவே ஒப்பந்தகாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மாநகராட்சிகுட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை மின் மோட்டார் அறை மற்றும் அய்யர்விளை அம்பேத்கார் நகர் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் சாலை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டறிந்தார்.
கவுன்சிலர் நாகேஸ்வரி, உதவி செயற் பொறியாளர் பிரின்ஸ், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜோஸ்பர், உள்பட பலர் உடனிருந்தனர்.