தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை பவனி.!*


புனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடியில் பழமை வாய்ந்த தூய பனிமய மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் கிறிஸ்துவர்கள் தவக்காலத்தின் கடைசி வாரம் வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்படுகிறது.


அன்றைய தினத்தில் இயேசு கிறிஸ்து மக்களுக்கு அனுபவித்த பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை பவனி நடைபெறுவது வழக்கம் அந்தவகையில் தூத்துக்குடியில் அமைந்து உள்ள 439 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய பனிமயமாதா பேராலயத்தில் நடைபெற்ற சிலுவைப்பாதை பவனி  ஆலய பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் நடைபெற்றது


இதில் இயேசு சிலுவையை சுமப்பது போன்ற திருச்சொரூபம் ஆலயத்தை சுற்றி பவனியாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது 14 தலங்களில் திருச்சொரூபத்தை நிறுத்தி பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த சிலுவைப்பாதை பவனியில் ஆயிரக்கணக்கானோர் கொண்டு பிரார்த்தனை செய்தனர். 

மேலும் சிலுவைப் பாதையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு நகர் முழுவதும் முக்கிய இடங்களில் அங்கங்கே பக்தர்கள் நேர்த்தியாக மோர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது இதனை முன்னிட்டு கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Previous Post Next Post