பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், அதனை குறைக்க வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியினர் தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி.கனகராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாளுக்குநாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக குறைக்கவேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும், தமிழக அரசு உடனடியாக கியாஸ் மானியம் வழங்கவேண்டும் என்பது
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அறிவுறுத்தல்படி தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி.கனகராஜ் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் மன்சூர்அலி, மாநில துணைச் செயலாளர் கிருபைராஜ், மாநில மகளிரணி குழு சரஸ்வதி, அசுபதி, இந்திரா, மாநில தொண்டரணி அசோக்குமார், மாநில இளைஞர் அணி மாரிமுத்து கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், உயர்த்தப்பட்டுள்ள விலைவாசி உயர்வினை குறைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி.கனகராஜ் பேசியதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் கொடிய கொரோனா நோய் தொற்றாலும், அதனால் பிறப்பிக்கபட்ட அரசின் ஊரடங்கு உத்தரவாலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகப்பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
தற்போதுதான் கொரோனா நோய் தொற்று ஒரளவிற்கு முடிந்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர். இப்படிப்பட்டச்சூழலில் மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது அக்கறை கொள்ளாமல் விலைவாசி பலமடங்கு உயர்வுக்கு காரணமாக இருந்து வருவது சரியானதல்ல.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் உயர்த்தி வரும் மனப்போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும், உடனடியாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்பபெறவேண்டும், மேலும் இவற்றின் விலையை ஜி.எஸ்.டி.வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும்.
தமிழக அரசு தான் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தது போன்று சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை வழங்கிடவேண்டும். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிடவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர்கள் அதிக்குமார்குடும்பர், விளாத்திக்குளம் பெத்துராஜ், பெருமாள், பொன்அமிர்தம், குருவை சதீஷ், சிவசெல்வம், கடம்பூர் கடற்கரை, ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி செந்தூர்பாண்டியன்(கிழக்கு), ராஜா(மேற்கு), ஓட்டப்பிடாரம் மனோகரன்(கிழக்கு), ஜேசிபி.முருகன்(மேற்கு), விளாத்திக்குளம் குளத்தூர்பெருமாள்(தெற்கு), உமையனன்(கிழக்கு),
முருகேசன்(வடக்கு), கருங்குளம் சின்னத்துரை, ஆழ்வை கேசவன்(கிழக்கு), ராஜன்(தெற்கு), புதூர் செண்பகக்கனி, கயத்தார் ரவி(கிழக்கு), சக்கரவர்த்தி(மேற்கு), கோவில்பட்டி சண்முகநாதன்(மேற்கு) உருளைகுடி அன்பு(கிழக்கு), தொண்டரணி கருங்குளம் பிரவீன், இளைஞரணி அழகர்சாமி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாநகர அமைப்பாளர் ரமேஷ், மாநகர துணை அமைப்பாளர் துரை, மாநகர இளைஞரணி அமைப்பாளர் மாரியப்பன், மாநகர மீனவரணி அமைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.